Ranveer Allahbadia Net Worth: ரன்வீர் அல்லாபாடியா எனப்படும் பீர் பைசெப்ஸுக்கு ரூ.60 கோடி நிகர சொத்து மதிப்பு உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Ranveer Allahbadia Net Worth: ரன்வீர் அல்லாபாடியா எனப்படும் பீர் பைசெப்ஸுக்கு ரூ.60 கோடி நிகர சொத்து மதிப்பு உள்ளன என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: February 11, 2025 at 10:38 pm
ரன்வீர் அல்லாபாடியா மீது வழக்குப்பதிவு: பீர் பைசெப்ஸ் என்று பிரபலமாக அறியப்படும் ரன்வீர் அல்லாபாடியா, சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேடன்ட்’ நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார்.
இதனால், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். சமூக ஊடக ஆளுமையான இவருக்கு ஊடக செல்வாக்கு மிக அதிகம். இந்நிலையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், மகிஜா, சமய் ரெய்னா மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மீது முறையான புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ரன்வீர் சமீபத்தில் தனது சமூக ஊடகங்களில் மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
மேலும், ரன்வீர் அல்லாபாடியா நாட்டின் மிகவும் பிரபலமான யூடியூபர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு ரூ.60 கோடியில் சொத்து மதிப்புகள் உள்ளன.
இவரது முதன்மை வருமான ஆதாரம் சமூக ஊடக விளம்பரங்கள், பிராண்ட் விளம்பரங்கள் எனக் கூறப்படுகின்றன. இவர், 22 வயதில் இருந்து யூட்யூப்பில் பிரபலமாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க உலகின் மோசமான விமானங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com