State Board Exam 2025: மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பிப். 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.
State Board Exam 2025: மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பிப். 13 ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளையும் சந்திக்க உள்ளார்.
Published on: February 6, 2025 at 4:47 pm
பொதுத்தேர்வு 2025: தேர்வுகள் தொடங்குவதற்கு ஒரு மாதம் உள்ள நிலையில், பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
12 ஆம் வகுப்புக்கு தேர்வு மார்ச் 3 முதல் 25 வரை நடைபெறுகிறது. அதேபோல், 11 ஆம் வகுப்புக்கு, மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி 27 வரையிலும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 28 தொடங்கி ஏப்ரல் 15 வரையிலும் நடைபெறுகிறது.
தேர்வு முடிவுகள் 12 ஆம் வகுப்புக்கு ஏப். 9 2025 தேதி அறிவிக்கப்படும் என்றும், 10 நாட்களுக்குப் பிறகு (ஏப்.19), 10 ஆம் வகுப்பு 11 ஆம் வகுப்புகளுக்கான முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சி.எஸ்.ஆர் திட்டத்தின் கீழ், சமீபத்தில் பிரபல நகைக் கடை, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 411 பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் 3 ஆயிரத்து 511 சிறுமிகளுக்கு மொத்தம் ரூ. 2.80 கோடி உதவித்தொகை வழங்கியது.
இந்நிலையில், சி.எஸ்.ஆர். நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசுப் பள்ளிக்கு பங்களிக்க அனைவரும் அழைக்கப்படுகிறார்கள். நிதியாக மட்டும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பாடப்புத்தகங்கள், பிற பள்ளி தொடர்பான பொருட்கள் என அனைத்து வழிகளிலும் நாங்கள் நன்கொடைகளையும் வரவேற்கிறோம்.
அரசு பள்ளிகளின் நலனுக்காக பொருட்களையோ, பணத்தையோ நன்கொடையாக வழங்குவதன் பின்னணியில் உள்ள நல்ல சிந்தனையை நாங்கள் பாராட்டுகிறோம்.” என்றார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com