மகளில் ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
மகளில் ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது.
Published on: December 10, 2024 at 11:08 am
Womens junior Asia Cup Hockey 2024 | ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதன் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்தியா 13-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தி இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இதனையடுத்து இந்திய அணி நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் இரு அணிகளாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
2-வது பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் தீபிகா 3 கோல்களும், வைஷ்ணவி மற்றும் கனிகா சிவாச் தலா ஒரு கோலும் அடித்தனர். நாளை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் இந்தியா சீனாவை எதிர்கொள்கிறது.
இதையும் படிங்க சச்சின் நண்பர்; பல கோடி சொத்துக்கள்: ஆரம்பகால வினோத் காம்ப்ளி தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com