கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், தனக்கு எதிராக ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கன்னட நடிகர் தர்ஷன், தனக்கு எதிராக ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Published on: December 10, 2024 at 10:30 am
Kannada actor Darshan case | கர்நாடகாவில் ரேணு சாமி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கன்னட நடிகர் தர்ஷன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் தனக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்படுவதாக நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ( டிசம்பர் 9 2024) தெரிவித்தார்.
நீதிபதி விஷ்வஜித் செட்டி முன்னிலையில் இந்த வழக்கு நேன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தர்ஷன் சார்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஷ் ஆஜரானார். அப்போது வழக்கறிஞர் நாகேஷ், ” வழக்கு விசாரணையில் ஏற்பட்டுள்ள சில தாமதங்களை சுட்டிக்காட்டி, தனது கட்சிக்காரர் தர்ஷனுக்கு எதிராக சாட்சியங்கள் உருவாக்கப்படுகின்றன” என குற்றம் சாட்டினார்.
மேலும் நடிகர் தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் அவரது தரப்பு வழக்கறிஞர் நாகேஷ் கேட்டுக்கொண்டார். இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசன்ன குமார், “இந்த வழக்கு மிகச் சரியான பாதையில் செல்கிறது. இபிகோ பிரிவு 302 இன் படி இது திட்டமிட்ட படுகொலை. படுகொலை செய்யப்பட்ட ரேணு சாமி கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.
அவரின் உடம்பில் 39 இடத்தில் கொடூரமான காயங்கள் காணப்பட்டன. எலும்புகள் உடைக்கப்பட்டுள்ளன. ரத்தம் உறைய வைக்கப்பட்டுள்ளது. மேலும் தர்ஷனுக்கு எதிராக டிஜிட்டல் ஆவணங்களும் உள்ளன. ஆகவே தர்ஷனுக்கு ஜாமின் வழங்கக் கூடாது” என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகர் தர்சனின் மனுவை ஒத்தி வைத்தார். நடிகர் தர்ஷன் மருத்துவ விடுப்பு கோரி ஜாமின் கோரி உள்ளார். பவித்ரா கௌடா என்பவருக்கு எதிராக, 33 வயதான ஆட்டோ டிரைவர் ரேணுகா சாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நடிகர் தர்ஷனின் உத்தரவுக்கு இணங்க அவரது ரசிகர்கள், அவரைக் கொடூரமாக கொலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேணுகா சாமி 2024 ஜூன் 9ஆம் தேதி பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், ஜூன் பதினோராம் தேதி கைது செய்யப்பட்டார். இவருக்கு நீதிபதி செட்டி அக்டோபர் 30ஆம் தேதி மருத்துவ காரணங்களுக்காக ஆறு வாரம் இடைக்கால ஜாமின் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க அல்லு அர்ஜுன் இல்லை; புஷ்பா படத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோ.. யார் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com