அற்புதங்கள் நிறைந்த சபரிமலை ஐயப்பசாமி கோவில் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
அற்புதங்கள் நிறைந்த சபரிமலை ஐயப்பசாமி கோவில் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Published on: December 1, 2024 at 9:13 am
Sabarimala Miracle | கேரளாவில் உள்ள சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் மற்ற கோவிலைப்போல கிடையாது. ஒவ்வொரு மாதமும் நடை சாத்துவதற்கு முன்னர் சுவாமி ஐயப்பன் மீது பசுஞ்சான விபூதி வைப்பர். சுவாமி ஐயப்பனின் வலது கையில் உள்ள சின்முத்திரை மீது ருத்ராட்சம் வைப்பார்கள். இதற்கு காரணம் சுவாமி ஐயப்பன் தவநிலையில் இருக்கப் போகிறார் என்பது ஆகும். மேலும் சுவாமி ஐயப்பனின் மற்றொரு கையில் ஒரு தண்டம் வைப்பார்கள்.
பின்னர் ஒரு விளக்கு ஏற்றி நடை சாத்துவர். அடுத்த மாதம் நடை திறக்கும் வரை அந்த விளக்கு எரிந்து கொண்டே தான் இருக்கும். கோவிலின் நடை திறந்து உலகத்தின் பார்வை கோயிலில் பட்ட உடனேயே சுவாமி ஐயப்பனின் தவக்கோலம் களைந்து விடும், அதே சமயம் அந்த விளக்கும் அணைந்து விடும்.
அதுமட்டுமல்லாது சுவாமி ஐயப்பன் கைகளில் வைத்த தண்டமும் கை மாறி இருக்கும். இந்த அதிசயம் ஒவ்வொரு மாதமும் நடந்து கொண்டே தான் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை நேரில் பார்த்தவர்கள் இருக்கின்றனர். சுவாமி ஐயப்பன் சபரிமலையில் உயிர்ப்புடன் தான் இருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.
இதையும் படிங்க ஒருமுறை அணிந்த மாலையை சுத்தம் செய்து மறுமுறை அணியலாமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com