Donald Trump: ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Donald Trump: ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Published on: June 16, 2025 at 6:44 pm
நியூயார்க், ஜூன் 16 2025: இஸ்ரேலும் ஈரானும் ஒருவருக்கொருவருக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதால் மேற்கு ஆசியாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேல் ஈரானின் எரிசக்தி மற்றும் அணுசக்தி தளங்களை குறிவைத்தது என்று தகவல்கள் வெளியாகின. இதற்கிடையில், தெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக ஈரான் கூறியது.
இந்த நிலையில், தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் தாக்கப்பட்டது. மேலும், உலகின் மிகப்பெரிய எரிவாயு வயலான சவுத் பார்ஸ் வயலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி தீ விபத்து ஏற்படுத்தியதை அடுத்து, ஈரான் அங்கு உற்பத்தியை ஓரளவு நிறுத்தியது.
மேலும், இந்தப் போரின் காரணமாக இரு தரப்பிலும் 20க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில், “அமெரிக்க ஆயுதப் படைகளின் முழு பலமும் இதற்கு முன் கண்டிராத அளவில் உங்கள் மீது இறங்கும்” என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தார். இன்றிரவு ஈரான் மீதான தாக்குதலுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஈரான் எந்த வகையிலும், வடிவத்தில் தாக்கினாலும் அவர்கள் மீது முழு பலரும் பிரயோகிக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com