ரஷ்ய அதிபர் புதினின் இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Published on: November 19, 2024 at 7:04 pm
Updated on: November 19, 2024 at 8:40 pm
Putin to visit India | ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வருகிறார். இந்தத் தகவலை ரஷ்ய அதிபர் மாளிகை உறுதி செய்துள்ளது. எனினும் தேதி உள்ளிட்ட பிற விஷயங்கள் வெளியாகவில்லை. இது குறித்து ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்டி பெஸ்கோப், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிதின் இந்திய பயணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது.
தேதி குறித்து இன்னபிற விஷயங்கள் விரைவில் அறிவிக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்ய பயணத்துக்கு பின்னர் இது வந்துள்ளது. இதனை நாங்கள் ஆவலோடு எதிர்நோக்குகிறோம்” என்றார்.
மேலும், “இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனான தனது உறவை ரஷ்யா மதிக்கிறது. பலதுருவ உலகம் என்று ரஷ்யா கூறும்போது, அதன் அர்த்தம். பிராந்திய விவகாரங்களில் ரஷ்யா தலையிடாது, அமெரிக்காவும் தலையிடக்கூடாது” என்றார்.
தொடர்ந்து, “சீனாவை எவ்வாறு கையாள்வது என்பதை இந்தியாவிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல நாங்கள் ஒருபோதும் துணிய மாட்டோம், இந்தியாவை எவ்வாறு கையாள்வது என்பதை சீனாவிடம் கூற நாங்கள் ஒருபோதும் துணிய மாட்டோம்” என்றார்.
பிப்ரவரி 2022 இல் உக்ரைனுக்கு எதிரான போரை நடத்திய பின்னர் இது புதினின் முதல் பயணமாகும்.
டிசம்பர் 6, 2021 அன்று புதுடெல்லியில் பிரதமர் மோடியுடன் புடின் கலந்து கொண்டார். முன்னதாக, பிரதமர் மோடி இந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவுக்குச் சென்றார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க இந்தியாவின் GSAT-N2 செயற்கைக்கோள் ; வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com