Savarkar In Marseille: பிரதமர் மோடி மார்சேயில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரருடனான நகரத்தின் தொடர்பை நினைவு கூர்ந்தார்.
Savarkar In Marseille: பிரதமர் மோடி மார்சேயில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது, சுதந்திரப் போராட்ட வீரருடனான நகரத்தின் தொடர்பை நினைவு கூர்ந்தார்.
Published on: February 12, 2025 at 12:34 pm
Updated on: February 12, 2025 at 2:12 pm
பிரான்சில் சாவர்க்கருக்கு மோடி மரியாதை: பிரெஞ்சு துறைமுக நகரத்தில் தரையிறங்கிய பிரதமர் நரேந்திர மோடி, சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கருடனான மார்சேயின் தொடர்பையும், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தையும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, பிரதமர் மோடி மார்சேயில் சாவர்க்கருக்கு அஞ்சலி செலுத்தினார்.
இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மார்சேயில் தரையிறங்கியுள்ளேன். இந்தியாவின் சுதந்திர வேட்கையில், இந்த நகரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
வீர சாவர்க்கர் துணிச்சலுடன் தப்பிக்க முயன்றது இங்குதான். அவரை பிரிட்டிஷ் காவலில் ஒப்படைக்கக் கூடாது என்று கோரிய மார்சேய் மக்களுக்கும், அக்கால பிரெஞ்சு ஆர்வலர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
வீர் சாவர்க்கரின் துணிச்சல் தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இங்கு, ஜூலை 8, 1910 அன்று, கப்பல் பிரான்சின் மார்சேய் துறைமுகத்தில் வந்தபோது, சாவர்க்கர் தப்பினா் என வரலாற்று செய்திகள் கூறுகின்றன.
அவர் ஒரு துளை வழியாக நழுவி பிரான்சில் தஞ்சம் கோரும் நம்பிக்கையுடன் கரைக்கு நீந்தினார். இருப்பினும், அவர் முழுமையாகத் தப்பிப்பதற்கு முன்பே அவர் பிரெஞ்சு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு ஆங்கிலேயர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய நாடுகடத்தல் பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே ஒரு இராஜதந்திர மோதலைத் தூண்டியது.
பல பிரெஞ்சு ஆர்வலர்கள் மற்றும் தலைவர்கள் பிரெஞ்சு மண்ணில் பிரிட்டிஷ் படைகள் எடுத்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் சாவர்க்கரை திருப்பி அனுப்பியிருக்கக் கூடாது என்று வாதிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இதுவே சரியான நேரம்: இந்தியாவுக்கு தொழில் தொடங்க வாருங்கள்; பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com