ஆப்கன் மீது பாக் தாக்குதல்.. 7 பேர் பலி.. பல்கலை கட்டடம் சேதம்!

Pakistani Strikes Kill 7: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவத் தாக்குதல்களில் மூவர் உயிரிழப்பு; 75 பேர் காயம் அடைந்தனர்.

Published on: April 28, 2026 at 9:30 pm

Updated on: April 28, 2026 at 9:41 pm

காபூல், ஏப்.28, 2026: ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில் பாகிஸ்தான் இராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 75 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக, மாகாண அதிகாரிகள் கூறுகையில், “திங்கள்கிழமை (ஏப்.27, 2026) பாகிஸ்தான் படைகள் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டன. தொடர்ந்து, மாகாணத் தலைநகரைச் சுற்றிய பகுதிகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது” என்றனர். மேலும், குனார் தகவல் மற்றும் கலாச்சார இயக்குநர் நஜீபுல்லா ஹனீஃப் கூறுகையில், “இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பொதுமக்கள் எனவும், தாக்குதலில் செய்யித் ஜமாலுத்தீன் ஆப்கான் பல்கலைக்கழக கட்டிடம் சேதமடைந்ததாகவும் உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. கந்தஹாரின் ஸ்பின் போல்டக் மாவட்டத்தில், பாகிஸ்தான் படைகள் பீரங்கி தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். அதற்கு ஆப்கான் படைகள் பதிலடி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டனர்.

இதற்கு முன், அதே மாவட்டத்தில் நடந்த மோதலில் 6 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததுடன், ஆப்கான் படைகள் ஆயுதங்களை கைப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, பாகிஸ்தான் படைகள் ஒரு ஆப்கான் சிறுவனை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் ஆப்கான் பாதுகாப்புப் படைகள் கடுமையான பதிலடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவத்தில், பாகிஸ்தான் ஊடகங்கள், தெற்கு வாசிரிஸ்தானில் ஆப்கான் தாலிபான் படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பொதுமக்கள் காயமடைந்தனர். இதில் இரண்டு பெண்களும் அடங்குவர் எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஈரானுக்கு கை கொடுக்கும் ரஷ்யா.. அமைதியை மீட்டெடுக்க உறுதி.. விளாடிமிர் புதின்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com