பிரான்சில் காட்டுத்தீயால் பரபரப்பு… 20,000-க்கும் மேற்பட்டோர் அவசரமாக வெளியேற்றம்!

France Wildfire: தென்மேற்கு பிரான்சின் போர்டோ அருகே வேகமாக பரவி வரும் காட்டுத்தீயால் 3,400 ஹெக்டேர் வனப்பகுதி எரிந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Published on: July 24, 2026 at 2:28 pm

பாரிஸ், ஜூலை 24 2026: தென்மேற்கு பிரான்சில் உள்ள போர்டோ அருகே ஏற்பட்ட காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால், 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 3,400 ஹெக்டேர் வனப்பகுதி தீயில் கருகியுள்ளது.

சவுமோஸ் (Saumos) கிராமம் அருகே உள்ள அடர்ந்த பைன் வனப்பகுதியில், புதர்களை அகற்ற பயன்படுத்தப்பட்ட இயந்திரத்தில் இருந்து தீப்பற்றியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தீ விபத்தில் 3 வீடுகள் மற்றும் ஒரு கேரவன் முழுமையாக எரிந்து சேதமடைந்துள்ளன. இருப்பினும், இதுவரை உயிரிழப்போ அல்லது காயமோ எதுவும் பதிவாகவில்லை.

வேகமாக பரவும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் சுமார் 800 தீயணைப்பு வீரர்கள், விமானங்கள் மற்றும் ராணுவத்தினர் இணைந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிரான்ஸ் உதவி கோரியதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியம் (EU) தீயை அணைக்கும் 3 நீர் தெளிப்பு விமானங்களை அனுப்பியுள்ளது.

சமீபகாலமாக பிரான்ஸ் முழுவதும் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக காட்டுத்தீ பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. அதிக வெப்பநிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீயை கட்டுப்படுத்தும் பணியில் சவால்கள் நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: அமெரிக்காவில் இந்தியர்கள் சட்டவிரோத குடியேற்றம் கடும் சரிவு.. முழு விவரம்!

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!
India vs Pakistan

“எல்லைத் தாண்டிய பயங்கரவாதம் தொடரும் வரை ஒத்துழைப்பு இல்லை”… ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு இந்தியா

‘டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்துக்கு எந்த மதிப்பும் இல்லை’.. வளைகுடா நாடுகளை தாக்கத் தொடங்கிய ஈரான்!
Donald Trump

‘டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்துக்கு எந்த மதிப்பும் இல்லை’.. வளைகுடா நாடுகளை தாக்கத் தொடங்கிய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com