Hindu man beaten to death in Bangladesh: வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், இந்து நபர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
Hindu man beaten to death in Bangladesh: வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், இந்து நபர் ஒருவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.

Published on: December 25, 2025 at 11:43 pm
டாக்கா, டிச.25, 2025: வங்கதேசத்தின் ராஜ்பாரி மாவட்டத்தில், சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இவர், மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறி ஒரு கும்பல் இவரை அடித்தே கொன்றுள்ளது.
ராஜ்பாரியின் பாங்ஷா பகுதியில் உள்ள ஹோசென்டங்கா கிராமத்தைச் சேர்ந்த ஷாஹிதுல் இஸ்லாம் என்பவரிடம் மிரட்டிப் பணம் பறித்ததாக கூறி இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக உள்ளூர் செய்தி சேனல்கள் கூறியுள்ளன.
இதையடுத்து கும்பல் ஒன்று இந்து இளைஞரை அடித்தே கொன்றுள்ளது. இதில் மரணம் அடைந்தவர் அம்ரித் மொண்டல் ஆவார். இந்தச் சம்பவம் புதன்கிழமை (டிச.24, 2025) நடந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், 27 வயதான தீபு சந்திர தாஸ் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார். கடந்த வியாழக்கிழமை அன்று அவரது உடல் ஒரு மரத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டது. இது உவகெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
டாக்காவில் உள்ள ஷாபாக் பகுதியில் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, வங்கதேசம் ஒரு அமைதியின்மையாக காணப்படுகிறது.
டந்த ஆண்டு மாணவர் போராட்டங்களின் போது முக்கிய முகமாக இருந்த ஹாடி, டிசம்பர் 18 அன்று துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வங்கதேசத்தில் தொடரும் அமைதியின்மை.. 20 தலைவர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com