Donald Trump | அமெரிக்க அதிபர் தேர்தலில் பால்ம் பீச்சில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களிக்கிறார்.
Donald Trump | அமெரிக்க அதிபர் தேர்தலில் பால்ம் பீச்சில் டொனால்ட் ட்ரம்ப் வாக்களிக்கிறார்.
Published on: November 5, 2024 at 8:38 pm
Updated on: November 5, 2024 at 11:24 pm
Donald Trump | அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. மில்லியன் கணக்கான வாக்குகள் இன்னும் எண்ணப்படாத நிலையில், தேர்தல் முடிவுகள் இந்திய நாள்படி புதன்கிழமை அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
இந்த நிலையில், டொனால்ட் டிரம்பின் துணை ஜனாதிபதி வேட்பாளரான ஜேடி வான்ஸ் ஓஹியோவில் வாக்களித்தார். ஓகியோவில் இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முன்னதாக, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மிச்சிகனில் தொடங்கியது. தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) உள்ள நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கவுள்ளார்.
இதற்கிடையில், ஆதரவாளர்கள் வாக்களிப்பதை உறுதி செய்யுமாறு கமலா ஹாரிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அவர், “கதவுகளைத் தட்டவும். வாக்காளர்களை அழைக்கவும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அணுகவும். ஒன்றாக, இதுவரை சொல்லப்பட்ட மிகப் பெரிய கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுதுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், டொனால்ட் டிரம்ப் பாம் பீச்சில் வாக்களிக்கிறார்.
இதையும் படிங்க அமெரிக்க அதிபர் தேர்தல்; ட்ரம்பை நெருங்கும் கமலா: கடும் போட்டி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com