Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.
Bangladesh: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் ஒரு இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

Published on: January 7, 2026 at 4:47 pm
டாக்கா, ஜன.7, 2026: வங்கதேசத்தின் நவ்காவன் மாவட்டத்தில் மிதுன் சாகர் என்ற இந்து சமூகத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்தார். இவர், வன்முறை கும்பலிடம் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசாரின் கூற்றுப்படி, “திருட்டு குற்றச்சாட்டில் ஒரு கூட்டம் அவரை துரத்தியுள்ளது. இதில் இருந்து தப்பிக்க அவர் ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வங்கதேசத்தில் சமூக பதற்றத்தை வெளிப்படுத்துகிறது. இந்நிலையில், இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நவ்காவன் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம், சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், வங்கதேச அரசு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகள், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சர்வதேச அளவில் வலுத்து வருகிறது.
இதையும் படிங்க: மோடிக்கு தெரியும் நான் மகிழ்ச்சியாக இல்லை.. டொனால்ட் ட்ரம்ப்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com