நேபாளத்தில் சாலை விபத்து.. 2 பேர் மரணம், 20 பேர் காயம்!

Nepal road accident: நேபாளத்தில் நடந்த சாலை விபத்தில் இரண்டு பேர் மரணித்த நிலையில் 20 பேர் காயமுற்றனர்.

Published on: September 29, 2025 at 12:21 pm

காத்மாண்டு, செப்.29, 2025: நேபாள நாட்டின் லும்பினி மாகாணத்தில் இன்று (திங்கள்கிழமை) மினிபஸ் ஒன்று விபத்துக்குள்ளாகி சரிவில் விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து, மாகாணத்தின் அர்காகாஞ்சி மாவட்டத்தில், செங்குத்தான திருப்பத்தில் ஏற்பட்டுள்ளது.

அதாவது, வாகனத்தின் பிரேக்குகள் செயலிழந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக, காவல்துறையினர் கூறியதாக காத்மாண்டு போஸ்ட் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த விபத்தில் 10 வயது மற்றும் 13 வயது குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : வெட்கம் இல்லை.. ஒசாமாவுக்கு அடைக்கலம்.. ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு பதிலடி

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது வழக்கு!
Dalit Student Death in Kerala

கேரளாவில் பட்டியலின மருத்துவ மாணவர் மரணம்.. சாதி அவமதிப்பு குற்றச்சாட்டு; ஆசிரியர்கள் மீது

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com