அமெரிக்காவில் பிரம்மாண்ட AI சிப் தொழிற்சாலை: ரூ.1.4 லட்சம் கோடி முதலீடு! எலான் மஸ்க் அதிரடி

Terafab AI Chip Plant: எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 16.8 பில்லியன் டாலர் மதிப்பிலான ‘டெராஃபேப்’ என்ற அதிநவீன AI செமிகண்டக்டர் உற்பத்தி மையத்தை அமைக்கவுள்ளன.

Published on: August 7, 2026 at 1:08 pm

Updated on: August 7, 2026 at 1:12 pm

ஹூஸ்டன், ஆக. 7 2026: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் அதிநவீன AI செமிகண்டக்டர் வளாகத்தை உருவாக்க ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்கள் இணைந்து 16.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘Terafab’ என அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட வளாகம், உலகளவில் உருவாகி வரும் சிப் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் அமைக்கப்பட உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.4 லட்சம் கோடிக்கு மேல் மதிப்புடைய இந்தத் திட்டத்தின் முதல் கட்டம் டெக்சாஸின் கிரைம்ஸ் கவுண்டியில் செயல்படுத்தப்பட உள்ளது.

3,000 பேருக்கு வேலை: சுமார் 100 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைய உள்ள இந்த ஒருங்கிணைந்த தொழிற்சாலையின் முதல் கட்டத்தில், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ஆலை இயக்குநர்கள் உள்ளிட்டோருக்கு குறைந்தது 3,000 உயர் ஊதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் மூலம் முதலீடு மேலும் கணிசமாக அதிகரிக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த தொழிற்சாலையில் மேம்பட்ட லாஜிக் மற்றும் மெமரி சிப்கள் ஒரே வளாகத்தில் தயாரிக்கப்பட்டு, பேக்கேஜிங் மற்றும் சோதனை பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன. டெஸ்லாவின் ஆப்டிமஸ் மனித வடிவ ரோபோக்கள் சைபர்கேப்வாகனங்கள் உள்ளிட்டவற்றுக்கு தேவையான சிப்களையும், ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிடும் விண்வெளி சுற்றுப்பாதை தரவு மையங்களுக்கான உயர் செயல்திறன் கொண்ட செயலிகளையும் தயாரிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். எலான் மஸ்க்கின் பல்வேறு நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் 1 டெராவாட்டுக்கும் அதிகமான கணினி திறனை பூர்த்தி செய்யும் வகையில் இந்த மெகா தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டத்தை வரவேற்ற டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபாட், முதலீட்டுக்கு ஆதரவாக 30 மில்லியன் அமெரிக்க டாலர் டெக்சாஸ் எண்டர்பிரைஸ் ஃபண்ட்செயல்திறன் மானியத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிநவீன சிப் உற்பத்தியை வேகப்படுத்துவதுடன், அந்தப் பிராந்தியத்தில் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் டெராஃபாப் திட்டம் அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஸ்பேஸ்எக்ஸ் இந்த ஆண்டு தொடக்கத்தில் AI ஸ்டார்ட்அப் xAI நிறுவனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, மஸ்க்கின் நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளும் தீவிரமடைந்துள்ளன.

இதையும் படிங்க : தாய்லாந்து பள்ளியில் கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்: 6 பேர் பலி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com