World Thirukkural Conference 2024 | 2024 உலக திருக்குறள் மாநாடு அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது
World Thirukkural Conference 2024 | 2024 உலக திருக்குறள் மாநாடு அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது
Published on: November 11, 2024 at 12:49 pm
Updated on: November 11, 2024 at 3:33 pm
World Thirukkural Conference 2024 | உலக திருக்குறள் மையம் புதுச்சேரி மற்றும் உலகத்தமிழர்கள் இணைய வழி பேரவை துபாய் இணைந்து நடத்திய ‘உலக திருக்குறள் மாநாடு 2024’ அசிஸ்ட் உலக சாதனை நிகழ்வு நவம்பர் 8ஆம் தேதி காலை 9:30 மணிக்கு தொடங்கி நவம்பர் 9ஆம் தேதி காலை 9:30 மணிக்கு நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சி அசிஸ்ட் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய நிகழ்நிலைப் பல்கலைக்கழகம் துணை வேந்தர் முனைவர் என் பஞ்சநதம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்துகிறார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் போ சத்தியமூர்த்தி அவர்கள் சிறப்புரை நிகழ்த்த , பிரைனோ பிரைன் நிர்வாக இயக்குனர் தமிழ் ஆர்வலர் திரு அனந்த் சுப்பிரமணியம் அவர்கள், மற்றும் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருத்தாளர் திண்டுக்கல் அ. ஷாஜஹான் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த சிறப்பு அமர்வில் வி.ஜி.பி.குழுமத்தின் தலைவர் கலைமாமணி செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் தலைமை உரையும், கோயமுத்தூர் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி அ.முகமது ஜியாவுதீன் அவர்கள் சிறப்புரையும் நிகழ்த்தினர்.
கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை நிறுவனர் முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்கள்,மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவர் முனைவர் போ சத்தியமூர்த்தி அவர்கள், உலக திருக்குறள் மையம் புதுச்சேரி திரு பா சந்திரமௌலி, கவிவானில் கவி மன்றம் கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பாண்டிச்சேரி திருமதி கவிதாயினி கலாவிசு, தமிழாசிரியர் எழுத்தாளர் பேச்சாளர் பெங்களூர் கவிஞர் இர.தேன்மொழி, கோயம்புத்தூர் உதவி பேராசிரியர் முனைவர் பிரேமலதா ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.
இணைய வழி கருத்தரங்கில் மஸ்கட், உகாண்டா, பஹரைன், கத்தார், டென்மார்க், ஒமான், மொரிசியஸ், கிழக்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, கம்போடியா, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பப்புவா நியூகினியா, தென் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, எத்தியோப்பியா நாடுகளை சேர்ந்த மிகச்சிறந்த பேச்சாளர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : 9 ஆண்டுகளாக வழங்கப்படாத தொல்காப்பியர் விருதுகள்: மருத்துவர் ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com