Thanjavur: தஞ்சாவூரில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தில் குழி தோண்டியபோது, பல பஞ்சலோஹ (ஐந்து உலோக கலவை) சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் வெளிச்சத்துக்கு வந்தன.
Thanjavur: தஞ்சாவூரில் வீடு கட்டும் பணிக்காக நிலத்தில் குழி தோண்டியபோது, பல பஞ்சலோஹ (ஐந்து உலோக கலவை) சிலைகள் மற்றும் வழிபாட்டு பொருட்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

Published on: April 30, 2026 at 6:27 pm
தஞ்சாவூர், ஏப்.30, 2026: தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், மானம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் பழங்காலச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதாவது, மானம்பாடி பிரதான சாலையைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (36), தனது வயலில் வரப்பை வெட்டும்போது, அங்கு சிலைகள் இருப்பதை கண்டறிந்தார். இந்நிலையில், அவர் உடனடியாக அவர் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் அளித்தார். இந்நிலையில், அதிகாரிகள் வந்து, சுமார் ஒன்றரை அடி உயரம் கொண்ட யானை சிலை, திருவாச்சி, சிறிய சுவாமி சிலைகள் மூன்று, உடைந்த பானை என மொத்தம் ஆறு உலோகச் சிலைகளை சேகரித்தனர்.
பின்னர், அவை திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, வட்டாட்சியர் சாந்தமீனாவிடம் ஒப்படைக்கப்பட்டன. வருவாய்த் துறை அதிகாரிகள், இந்தச் சிலைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் அளித்ததாகவும், தொல்லியல் துறை விரைவில் ஆய்வு மேற்கொள்ளும் எனவும் தெரிவித்தனர்.
ஆய்வுக்குப் பிறகு, இந்தச் சிலைகள் எந்தக் காலத்தைச் சேர்ந்தவை, அவற்றின் வரலாற்று முக்கியத்துவம் என்ன என்பதற்கான தெளிவான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கொடைக்கானலில் 4 நாள்கள் ஓய்வு.. சென்னை திரும்பினார் மு.க ஸ்டாலின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com