SDPI seminar in Madurai | அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
SDPI seminar in Madurai | அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது.
Published on: November 11, 2024 at 1:06 pm
SDPI seminar in Madurai | எஸ்.டி.பி.ஐ கட்சி கல்வியாளர் அணி சார்பாக மௌலானா அபுல் கலாம் ஆசாத் 136 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் கல்வி கருத்தரங்கம் கல்வியாளர் அணி மாநில இணை செயலாளர் ரியாஜ் அவர்கள் தலைமையில் இன்று மதுரையில் நடைபெற்றது.
கல்வியாளர் அணி மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது ரிபாயி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த. மாநிலச் செயற்குழு உறுப்பினர் சபியுல்லாஹ் கான் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயலாளர் நஜ்மா பேகம், விமன் இந்தியா மூவ்மெண்ட் மாநில தலைவர் பாத்திமா கனி, கட்சியின் மதுரை தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், வடக்கு மாவட்ட தலைவர் பிலால்தீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி, எழுத்தாளர் அகமது ரியாஸ், வக்ப் வாரிய கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் அப்துல் காதிர் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், கல்வியாளர் அணியின் நிர்வாகிகள், எழுத்தாளர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள், இளைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்வியாளர் அணியின் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் கவிஞர் சமீமா அவர்கள் நன்றி கூறினார்.
இதையும் படிங்க தமிழக மீனவர்கள் 23 பேர் கைது; உடனடி பேச்சுவார்த்தை தேவை: அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com