கன்னியாகுமரி வரும் விஜய்.. ஆறு மணி நேரம் மட்டுமே அனுமதி.. பரபரப்பு தகவல்கள்!

Vijay in kanyakumari : நடிகர் விஜய் நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு செல்ல உள்ளார். தேர்தல் பிரசாரத்திற்காக அவருக்கு போலீசார் 6 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கியுள்ளனர்.

Published on: April 11, 2026 at 11:32 am

சென்னை, ஏப் 11 2026: தமிழக சட்ட மன்றத் தேர்தல் வருகிற 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிகளாக தலைவர் விஜய் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் மற்றும் ரோட் சோ மேற்கொள்ளும் இடங்களிலும் அதிக கூட்ட நெரிசல் காணப்படுவதால் பிரச்சாரத்திற்கு கூடுதல் விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று காரைக்குடியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு கூட்ட நெரிசல் காரணமாக விஜய் தாமதமாக சென்றதால் அங்கு அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் விஜய் பேசாமலேயே சென்றார். இது தவெக தொண்டர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியது.

இதனால் நாளை கன்னியாகுமரியில் விஜய் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் மற்றும் பத்மநாபபுரம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, விஜய் நாளை (ஞாயிற்றுக்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார்.

இந்நிலையில், கூட்டம் அதிகமாக கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதாவது கட்சியின் தரப்பில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை அனுமதி கோரப்பட்ட நிலையில், மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை 6 மணி நேரம் மட்டுமே கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் தவெக மாநில நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : எம்.ஜி.ஆர்.க்கு அடுத்து மக்கள் செல்வாக்கு கொண்டவர் விஜய்.. சதீஷ் கிறிஸ்டோபர்!

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம் அணி திட்டம்! Edappadi Palaniswami

அதிமுகவில் மீண்டும் மோதல்? பொதுக்குழுவைக் கூட்ட இபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்க வேலுமணி, சண்முகம்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com