‘நம்ம மெரினா நம்ம பெருமை’: ரோந்து வாகனங்களை தொடங்கிவைத்த உதயநிதி!

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டை உதயநிதி தொடங்கிவைத்தார்.

Published on: August 25, 2024 at 11:51 am

சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள ரோந்து வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

இது குறித்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் அமைச்சர் உதயநிதி, “நம்முடைய சிங்காரச் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் மெரினா கடற்கரையினை அழகோடும் சுத்தமாகவும் பராமரிக்க கழக அரசு எப்போதும் முன்னுரிமை கொடுத்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் தூய்மைப் பணிகளை கண்காணிக்க பயன்படுத்தப்படவுள்ள All Terrain ரோந்து வாகனங்களின் பயன்பாட்டைCத் தொடங்கி வைத்தோம்.

மேலும், மணல் பரப்பை சுத்தம் செய்யும் எந்திரங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றையும் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தோம்.

மாநகராட்சியால் முன்னெடுக்கப்பட்ட ‘’நம்ம மெரினா நம்ம பெருமை” விழிப்புணர்வு இயக்கத்தில், சிறப்பாக செயல்பட்ட 10 குழந்தைகளை பாராட்டி, அவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மேயர் பிரியா, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com