திருப்பூரில் பெண் காவலர் தற்கொலை… போலீஸ் குடியிருப்பில் சோகம்!

Tiruppur Cop Death: திருவண்ணாமலையைச் சேர்ந்த 24 வயது பெண் காவலர் ரஞ்சனி, திருப்பூர் போலீஸ் குடியிருப்பில் தூக்கிட்டு உயிரிழந்தார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published on: July 24, 2026 at 11:42 am

திருப்பூர், ஜூலை 24 2026: திருப்பூர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்த 24 வயதான பெண் காவலர் ரஞ்சனி, போலீஸ் குடியிருப்பில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜாவின் மகளான ரஞ்சனி, 2022ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்ததையடுத்து, திருப்பூர் ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றி வந்தார். அவர் நள்ளூர் பகுதியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

வியாழக்கிழமை காலை வழக்கமான ரோல் கால் பணியில் கலந்து கொண்ட ரஞ்சனி, காலை சுமார் 10.30 மணியளவில் தனது குடியிருப்பிற்கு திரும்பியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார்.

அந்த விபரீத முடிவை எடுப்பதற்கு முன்பு மற்றொரு பெண் காவலருக்கு தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதே குடியிருப்பில் வசித்த காவலர்கள் உடனடியாக அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது ரஞ்சனி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததால், அவரை மீட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழப்புக்கான காரணம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க : தூத்துக்குடி காவல் நிலைய சித்திரவதை? 24 வயது இளைஞர் உயிரிழப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com