சென்னையில் மழைக்கு வாய்ப்பு: நெல்லை, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி அலெர்ட் ப்ளீஷ்!

RMC Chennai | Rain Alert | திருநெல்வேலி உள்பட 9 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Published on: September 30, 2024 at 4:02 pm

RMC Chennai | Rain Alert | சென்னை வானிலை மண்டல ஆய்வு மையத்தின் இயக்குனர் பா. செந்தாமரைக் கண்ணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

01.10.2024 முதல் 03.10.2024 வரை

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

04,10,2024 மற்றும் 05.10.2024

தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய வேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

29.09.2024 மற்றும் 30.09.2024: மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க

சென்னையில் பரபரப்பு.. பெண் மருத்துவர் உடையில் திருட்டு! Stanley Hostel Theft

சென்னையில் பரபரப்பு.. பெண் மருத்துவர் உடையில் திருட்டு!

Stanley Hostel Theft: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவியர் விடுதியில் மருத்துவர் போல வேடமணிந்து நகைகள் மற்றும் விலைமதிப்புள்ள பொருட்களை திருடியதாக…

இளையராஜா இசை மையம் திறப்பு.. அக்.11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி! Narendra Modi

இளையராஜா இசை மையம் திறப்பு.. அக்.11 சென்னை வருகிறார் பிரதமர் மோடி!

Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11-ஆம் தேதி சென்னை வருகிறார். அவரது பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள…

பள்ளிக்கரணையில் பரிதாபம்.. வேன் மோதி கல்லூரி பெண் ஊழியர் உயிரிழப்பு Pallikaranai Van Accident

பள்ளிக்கரணையில் பரிதாபம்.. வேன் மோதி கல்லூரி பெண் ஊழியர் உயிரிழப்பு

Pallikaranai Van Accident: பள்ளிக்கரணையில், வேன் மோதி கல்லூரி பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது….

தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்! Special Buses

தென் மாவட்ட மக்கள் சென்னை திரும்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.. அமைச்சர் விஜய்

Special Buses: விநாயகர் சதுர்த்தியை கொண்டாட தங்களது ஊருக்கு சென்ற தென் மாவட்ட மக்கள் திரும்பி சென்னை வரும் வகையில், அதற்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர்…

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது! 7 KG GANJA SEIZED

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சா.. 2 நேபாள இளைஞர்கள் கைது!

7 KG GANJA SEIZED : சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் அருகே வட மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com