தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை கத்தியா குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூரில் அரசு பள்ளி ஆசிரியை கத்தியா குத்தி கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Published on: November 20, 2024 at 4:10 pm
Thanjavur School Teacher Murder | தஞ்சாவூர் மாவட்டம் பள்ளிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி(26) இன்று காலை வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். சக ஆசிரியர்கள் ரமணியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கில் சின்னமணி கிராமத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். ஆசிரியை ரமணியை மதன்குமார் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ரமணியின் பெற்றோர் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரத்தில் மதன்குமார் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆசிரியை ரமணியின் கழுத்தில் குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு உள்ளது செய்துள்ள போலீசார் மதனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com