Tasmac Bill | டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறைக்கான சோதனை முயற்சியாக ராணிப்பேட்டையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதல்கட்டமக இது 7 டாஸ்மாக் கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்தக் கடைகள், ஆற்காடு, திமிரி, வானம்பாடி, ரத்தினகிரி, ராணிப்பேட்டை, அரக்கோணம், நெமிலி ஆகும். இந்த கடைகளில் மது வாங்க வந்தவர்களுக்கு பில்கள் வழங்கப்பட்டன.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “இது நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் விலை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது என்ற சர்ச்சை முடிவுக்கு வரும். மேலும், மது பிரியர்களுக்கு எந்த ரகம் பிடித்துள்ளது; எது அதிகம் விற்பனையாகிறது என்ற தகவலும் கிடைக்கும்” என்றார்.
கடந்த காலங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளில் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை அமைச்சர் வரை சென்றது. தொடர்ந்து, இது தொடர்பாக அமைச்சர் விளக்கம் அளித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க
Coldrif owner arrested: கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிப்பு உரிமையாளர் காஞ்சிபுரத்தில் கைது செய்யப்பட்டார்….
Ennore Powerplant accident: எண்ணூரில் வடமாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்….
World Seafood Conference in Chennai : உலக கடல் உணவு மாநாடு, 2026 பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது….
Padaiyaanda Maveera movie issue: வீரப்பன் பெயரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என கௌதமன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது….
Chennai சென்னையில் 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்