RS Bharti replies to Vijay | ” திமுக ஓர் காய்ச்ச மரம்; காய்ச்ச மரம் தான் கல்லடி படும். விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு” என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நடிகர் விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.
RS Bharti replies to Vijay | ” திமுக ஓர் காய்ச்ச மரம்; காய்ச்ச மரம் தான் கல்லடி படும். விமர்சனங்களை தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு” என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி நடிகர் விஜய்க்கு பதில் அளித்துள்ளார்.
Published on: October 28, 2024 at 10:42 am
RS Bharti replies to Vijay | நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை நேற்று நடத்தி முடித்தார். இந்த மாநாடு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மாநாட்டில் பேசிய விஜய், ” திராவிட மாடல், பெரியார், அண்ணா பெயரில் நம்மை சுரண்டி கொள்ளை அடிக்கும் கூட்டம் தான் நம் அடுத்த எதிரி” என்றார்.
மேலும் மகத்தான ஆட்சி என்பது மக்களுக்கான ஆட்சி தான் என்று கூறிய நடிகர் விஜய், ” மாற்று சக்தி என ஏமாற்றுவது எங்கள் நோக்கம் அல்ல; ஏமாற்று சக்திகளிடமிருந்து மக்களை காப்பது தான் எங்கள் நோக்கம்” என்றார். தொடர்ந்து மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுகின்றனர்.
மோடி மஸ்தான் வேலை என்னிடம் பலிக்காது. நாங்கள் வைத்திருக்கும் நிறங்களைத் தவிர நீங்கள் எங்களுக்கு எந்த நிறமும் பூச முடியாது. என்னை கூத்தாடி விஜய் என கூறுகின்றனர். எம்ஜிஆர் மற்றும் என் டி ஆர் கட்சி தொடங்கிய போதும் இதே போல் தான் கூறினார்கள்.
அவர்கள் பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? என்றார். நடிகர் விஜயின் பேச்சு மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விஜய் பேச்சுக் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, ” திமுக ஓர் காய்ச்ச மரம்; காய்ச்ச மரம் தான் கல்லடி படும். திமுக ஓர் ஆலமரம்; தேம்ஸ் நதியை போன்றது. வார்த்தைக்கு வார்த்தை பதில் அளிக்க முடியாது; எந்த விமர்சனங்களையும் தாங்கும் சக்தி எங்களுக்கு உண்டு” என்றார்.
இதையும் படிங்க ‘திராவிட மாடல்- பெரியார் பெயரில் கொள்ளை அடிக்கும் குடும்பம்; நம் அடுத்த எதிரி இவர்கள்தான்’: விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com