Raghupathi replies to Vijay | தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து பேசிய அவர், ” இதேபோன்று பல கூட்டங்களை திமுக நடத்தியுள்ளது. திராவிட மாடல் ஆட்சியை மக்களிடமிருந்து பிரிக்க முடியாது. விஜய் அதிமுகவை விமர்சிக்காதது அக்கட்சியின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே. விஜய் பாஜகவின் ‘ஏ’ டீம்மோ ‘பி’ டீம்மோ இல்லை. அவர் பாஜகவின் சி டீம்” என்றார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டை நேற்று நடத்தி முடித்தார். இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மாநாட்டில் விஜய் ஊழல் மற்றும் குடும்ப மதவாத ஆட்சிகளுக்கு எதிராக பேசினார். மேலும், பெரியாரின் பெயரில் மக்களை சுரண்டும் குடும்பம் தான் நம் முதல் எதிரி என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘திமுக ஓர் தேம்ஸ் நதி; விமர்சனங்களை தாங்கும் சக்தி உண்டு’; விஜய்க்கு ஆர்.எஸ் பாரதி பதில்!
CM Vijay: மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோடிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்….
Udhayanidhi Stalin: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமனுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்….
Chiranjeevi: 1990 காலகட்டத்தில் அறிமுகமான விஜய் போல் அவரது மகன் ஜேசன் இருப்பதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்