“துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்” என ரஜினிகாந்த் கூறினார்.
February 6, 2025
“துரைமுருகன் என் நீண்ட கால நண்பர்” என ரஜினிகாந்த் கூறினார்.
Published on: August 26, 2024 at 6:27 am
Updated on: August 26, 2024 at 11:16 am
“துரைமுருகன் எனது நீண்டகால நண்பர்” என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். மேலும் புதிதாக கட்சி கொடி பாடல் அறிமுகப்படுத்திய நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் கூறினார்.
சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் எ.வ. வேலு எழுதிய, “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியீடு விழா நடந்தது.
எ.வ. வேலு எழுதிய, “கலைஞர் எனும் தாய்” புத்தகம்: பெயர் சூட்டியவர் யார் தெரியுமா?
இதில் பேசிய ரஜினிகாந்த், “சில சீனியர்கள் டிகிரி வாங்கிய பின்பும் பள்ளியை விட்டு பிரிய மறுக்கின்றனர். துரைமுருகன் கருணாநிதி கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவர். மு.க. ஸ்டாலினுக்கு ஹாட்ஸ் ஆஃப் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “சில நடிகர்கள் வயதாகி பல் போன பின்பும், இளையவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொடர்ந்து நடிக்கின்றனர்” என்றார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்திடம் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள். இதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், “துரைமுருகன் என் நீண்ட கால நண்பர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது. எங்கள் நட்பு எப்போதுமே தொடரும்” என்றார்.
தொடர்ந்து நடிகர் விஜய் புதிய கட்சி கட்சி கொடி, பாடல் அறிமுகப்படுத்தியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவருக்கு என் வாழ்த்துகள்” என்றார்.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com