அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ரமேஷ் பாபு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் ஆந்திராவின் திருப்பதியை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ரமேஷ் பாபு சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவர் ஆந்திராவின் திருப்பதியை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.
Published on: August 25, 2024 at 6:04 pm
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மருத்துவர் ரமேஷ் பாபு பரம்ஷெட்டி சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் அமெரிக்காவில் பரவலாக அறியப்பட்ட மருத்துவர் ஆவார்.
ஆந்திராவின் திருப்பதியை பூர்விகமாக கொண்ட ரமேஷ் பாபு, அமெரிக்காவின் அலபாமா (Alabama) நகரில் உள்ள டஸ்கலூசா (Tuscaloosa) என்ற பகுதியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
மருத்துவ துறையில் 38 ஆண்டுகள் அனுபம் கொண்ட ரமேஷ் பாபு, அமெரிக்காவில் பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்துள்ளார். மேலும், ரமேஷ் பாபு அவசர மருத்துவம் மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
உள்ளூர் அறிக்கைகளின்படி, மருத்துவத் தொழிலில் அவர் செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்பின் காரணமாக டஸ்கலூசாவில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுமட்டுமின்றி, கோவிட் -19 தொற்றுநோய்களின் போது அவர் விரிவான பணிகளைச் செய்தார் மற்றும் அதற்கான விருதுகளையும் பெற்றார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள், அனைவரும் அமெரிக்காவில் குடியேறியதாக தகவல்கள் கூறுகின்றன.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com