ராகுல் காந்தி வருகை.. சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு.. 15 ஆயிரம் போலீசார் குவிப்பு!

Rahul Gandhi Chennai Visit : காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Published on: October 10, 2026 at 1:11 pm

சென்னை, அக்.10, 2026: காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சென்னைக்கு வருகை தருவதை முன்னிட்டு, நகரம் முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யுடன் மதிய உணவு சந்திப்பிலும் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னை முழுவதும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையில் சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெறும் தீவுத்திடல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பயணிக்கும் சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகள் கூடுதலாக வலுப்படுத்தப்பட்டுள்ளன.

ராகுல் காந்தி பங்கேற்கும் ‘சத்ரோன் கி கூஞ்ச்’ (மாணவர்களின் குரல்) என்ற நிகழ்ச்சி, சென்னை தீவுத்திடலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க க்யூ.ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்பதுடன், ஆண், பெண் மாணவர்கள் தனித்தனி வழிகளில் அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்த தகவலின்படி, பதிவு செய்து க்யூ.ஆர் குறியீடு பெற்ற சுமார் 10,000 முதல் 20,000 மாணவர்கள் வரை நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளது.

நீட் தேர்வு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள் கல்வி மற்றும் மத்திய அரசின் கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து மாணவர்கள் ராகுல் காந்தியிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பவும், தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மதிய உணவருந்தி ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் இரு தலைவர்களும் பங்கேற்கும் முதல் அதிகாரப்பூர்வ உயர்மட்ட ஆலோசனைக் கூட்டமாக இது கருதப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையிலான கூட்டணி அரசியல் சூழலில் இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி, மத்திய சென்னை மற்றும் முக்கியப் போக்குவரத்துப் பாதைகளில் வாகனச் சோதனை, கண்காணிப்பு மற்றும் தங்கும் விடுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களுடனான நிகழ்ச்சி முடிந்ததும், இரவு சுமார் 8.30 மணிக்கு தீவுத்திடலில் இருந்து விமான நிலையத்திற்குப் புறப்பட்டு, இரவு 9.40 மணிக்கு டெல்லி திரும்பும் விமானத்தில் ராகுல் காந்தி செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரசு அதிகாரிகள் சொத்து விவரங்களை காட்டினால் மட்டுமே பதவி உயர்வு.. தமிழ்நாடு அரசு அதிரடி!

புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்! Puducherry By-Election

புதுச்சேரி இடைத்தேர்தல்: டெபாசிட் இழந்த தி.மு.க.. மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்ட வேட்பாளர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com