Coimbatore | கோவையில் பூவரசு மரம் ஒன்று ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Coimbatore | கோவையில் பூவரசு மரம் ஒன்று ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
Published on: November 11, 2024 at 9:03 pm
Coimbatore | கோவை போத்தனூர் சாலையில் கருப்பராயன் கோவில் பஸ் ஸ்டாப்பில் பூவரசு மரம் ஒன்று இருந்தது. 13 ஆண்டுகள் வயதான இந்த மரம், செழிப்புடனே காணப்பட்டது. இந்த நிலையில் பூவரசு மரம் திடீரென காய்ந்து விழுந்தது.
இதற்கிடையில் மரத்தில் வேர் பகுதியில் 3 துளைகள் போடப்பட்டிருந்தன. இந்தத் துளைகளின் வழியே ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது. இது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அருகில் உள்ள ஒரு கடைக்காரர் இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
அதாவது கடையை பூவரச மரம் மறைக்கிறது என்ற காரணத்தினால் ஆசிட் ஊற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 13 ஆண்டுகள் பழமையான பூவரசு மரம், ஆசிட் ஊற்றி அழிக்கப்பட்டது, அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க ‘ கடற்கரையை கல்லறையாக பார்ப்பது திராவிடம்’: சீமான்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com