Madurai | Madurai high court| மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவை அகற்றக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Madurai | Madurai high court| மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவை அகற்றக் கோரி மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on: September 5, 2024 at 1:55 pm
Updated on: September 5, 2024 at 4:35 pm
Madurai | Madurai high court| மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் அருகில் உள்ள, “நக்கீரர் தோரண வாயில்” வளைவை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசாரணை நடத்தியது.
இந்த பொதுநல வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை பொதுநல மனு மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
மதுரை பீபிகுளத்தைச் சேர்ந்த எஸ்.ஜெய்னப் பீவி என்பவர் தாக்கல் செய்த மனுவுக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
இந்த நுழைவு வளைவால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். பீக் ஹவர்ஸில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வளைவை மற்றொரு இடத்தில் புதிதாக மாற்றி வைக்கலாம் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் பல்வேறு விபத்துக்கள் நடப்பதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி பண்டிகை; 350 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: தமிழ்நாடு அரசு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com