Nithyananda’s health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
Nithyananda’s health condition: பிரபல சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசாவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
Published on: April 1, 2025 at 11:31 pm
Updated on: April 1, 2025 at 11:32 pm
சென்னை ஏப்ரல் 1 2025: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து கைலாசவிலிருந்து அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது.
நித்தியானந்தா மறைந்து விட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் கைலாச முகநூல் பக்கத்தில் இந்த விளக்கம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், “நித்தியானந்தா நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார்; நித்தியானந்தாவின் உடல்நிலை குறித்து பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அந்தச் செய்தி குறிப்பில், ” நித்தியானந்தா மறைந்து விட்டதாக, பல்வேறு ஊடகங்கள் தீங்கிழைக்கும் விதமாக குற்றவியல் ரீதியாகவும் கூறி வருகின்றன. நித்தியானந்தா மிகவும் ஆரோக்கியமாக பாதுகாப்பாக சுறுசுறுப்பாக இருக்கிறார்.
2025 மார்ச் 30ம் தேதி அவர் உகாதி கொண்டாட்டங்களில் ஈடுபட்டார். இந்த நிலையில் கைலாசாவை இழிவு படுத்தவும் அவதூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலும் உண்மைக்கு மாறான இந்தப் பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன.
இந்தப் பிரச்சாரங்கள் கண்டிக்கத்தக்கவை மேலும் தீங்கிழைப்பவை. இந்த தவறான பிரச்சாரங்கள் துன்புறுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குற்றவியல் சதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க; தமிழக பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படுகிறா? புதிய தலைவர் யார்? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com