Tenkasi: தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Tenkasi: தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Published on: March 6, 2025 at 11:45 pm
புதுடெல்லி, மார்ச்.6: தென்காசியில் 8 குடும்பங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் உள்ள சாம்பவர்வடகரை நகரில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான பிரச்சினையில் கிராமத்தலைவர், ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் ஒதுக்கி வைத்ததாக வெளியான தகவல் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
மேலும், சம்பந்தப்பட்ட குடும்பத்தை ஆதரித்த மேலும் 7 குடும்பங்களும் ஒதுக்கி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர்் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 8 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த செய்தியின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், மனித உரிமை மீறல் தொடர்பான பிரச்சினை அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக ஆணையம் கருத்தில் கொள்ளும். எனவே, இது குறித்து 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மாதம் 20-ந் தேதி வெளியான ஊடக தகவல்களில், பாதிக்கப்பட்ட குடும்பங்கள் உள்ளூர் கடைகள் மற்றும் பிற வசதிகளை அணுகுவதற்கும், அப்பகுதியைச் சேர்ந்த பிற மக்களுடன் தொடர்புகொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. கிராமத்தலைவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, வருவாய் கோட்டாட்சியர் அவருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் அதில் எந்த பயனும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க காவல் சீருடையில் எஸ்.ஐ தற்கொலை.. தீயாய் பரவும்.. அதிர்ச்சி சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com