Kalaingar Magalir Urimai Thogai scheme: மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 2025 ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறினார்.
Kalaingar Magalir Urimai Thogai scheme: மகளிர் உதவித் தொகை திட்டத்தில் 2025 ஜூன் முதல் விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் கூறினார்.
Published on: April 25, 2025 at 7:46 pm
சென்னை, ஏப்.25 2025: மகளிர் உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2025 ஜூன் மாதம் முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் எள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.25 2025) தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விண்ணப்பிக்கலாம்” என்றார். மேலும், இத்திட்டத்தின் கீழ் இதுவரை 1.14 கோடி பேருக்கு மாதந்தோறும் இதுவரை ரூ.1000 வழங்கப்படுகிறது என்றார்.
தொடர்ந்து, “9 ஆயிரம் இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் முகாம் நடைபெறவுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் விடுபட்ட நபர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றார். தமிழ்நாடு அரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தில் தங்களுக்கு உதவி கிடைக்கவில்லை என சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், 2025 ஜூன் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் நிதி உதவி கிடைக்க பெறாத நபர்கள் மீண்டும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு; அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தை விடுவித்த உத்தரவு ரத்து.!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com