Thangam Tennarasu | சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Thangam Tennarasu | சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
Published on: October 9, 2024 at 3:25 pm
Thangam Tennarasu | சாம்சங் தொழிலாளர்கள் ஆலை விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். மாத ஊதியத்துடன், ஊக்கத்தொகை, அடிப்படை வசதிகள் போன்ற கோரிக்கையை சாம்சங் ஏற்றுக்கொண்டுள்ளது.
மேலும், தொழிற்சங்கத்துக்கும் தொழிலாளர் நலத்துறை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தொழிலாளர்கள் நலனும், இளைஞர்களின் வேலை வாய்ப்பும் முக்கியம். இருப்பினும், போராடும் தொழிலாளர்களை விரோதமாக பார்க்கவில்லை. அடக்குமுறையும் நடக்கவில்லை. காவல் துறையோடு மோதலில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை மூலமாக பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர அரசு தயாராக உள்ளது” என்றார். சாம்சங் ஆலை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதையும் படிங்க தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது: போராட்ட பந்தல் அகற்றம்: அன்புமணி கண்டனம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com