Thirupparankundram hill Deepathoon: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Thirupparankundram hill Deepathoon: திருப்பரன்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published on: January 6, 2026 at 4:03 pm
சென்னை, ஜன.6, 2026: திருப்பரன்குன்றம் மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் தலைமையிலான இரு நீதிபதிகள் அமர்வு, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூண் (Deepathoon) சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சொந்தமானது என்று தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், அந்த இடத்தில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆர்க்கியாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா (ASI) உடன் ஆலோசித்து, எத்தனை பேர் செல்லலாம் என்பதை நிர்ணயிக்கலாம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: அமித் ஷாவிடம் பேசினேன்.. ஓபிஎஸ் ஓபன் டாக்!
இந்த வழக்கில் ஹிந்து முன்னணி வழக்கறிஞர் நிரஞ்சன் எஸ். குமார் – “தீபம் ஏற்றப்பட வேண்டும், அது மலையின் உச்சியில் ஏற்றப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார். மேலும், மனுதாரர் ராஜேஷ் – “இது இந்து மதத்திற்கும் முருக பக்தர்களுக்கும் வெற்றி” என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் கார்த்திகை தீப விழாவில், பக்தர்கள், இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னதாகவே மலையின் உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் அரசு அதிகாரிகள், பல வருடங்களாக நடைமுறையில் இருந்த தீப மண்டபத்தில் தீபம் ஏற்றும் பழக்கத்தை மீறுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மருத்துவமனைகளை குடிப்பகங்கள் ஆக்கியதே திமுகவின் சாதனை.. அன்புமணி ராமதாஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com