Khader Mohideen: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
Khader Mohideen: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் மு.க. ஸ்டாலின் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
Published on: September 27, 2025 at 4:40 pm
சென்னை, செப்.27, 2025: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வக்பு வாரியம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் பெற்றுத் தரும் இயக்க மாக தி.மு.க செயல் பட்டு வருகிறது என்ப தற்கு வக்பு வாரியம் தொடர் பான தமிழ்நாடு அரசின் அறி விப்பு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். முஸ்லிம் சமுதாயத்தின் நன்மைக்காக தளபதி மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திராவிட மாடல் அரசு அனைத்து வகை களிலும் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : திராவிட மாடல் என்றாலே டிராமாதான்.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடாளு மன்றத்தில் குரல் கொடுத்த துடன் தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது” என்றார்.
பாலஸ்தீனத்துக்கு குரல்
இதையடுத்து, “பாலஸ்தீன மக்கள் அனுபவித்து வரும் கொடுமை களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாகவும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவது தி.மு.க. அரசுதான். ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத் துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : சாதிவாரி கணக்கெடுப்பு சட்ட விரோதம் அல்ல.. அன்புமணி ராமதாஸ்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com