தி பாரடைஸ் படத்தின் வில்லன் இந்த நடிகரா? கெத்தாக வெளியான போஸ்டர்!

Mohan Babu: தி பாரடைஸ் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Published on: September 27, 2025 at 4:58 pm

சென்னை, செப்.27, 2025: தி பாரடைஸ் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் மூத்த நடிகர் மோகன் பாபு நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்குத் திரும்பும் மோகன் பாபுவின் இந்த வேடம், அவர் பழைய “வின்டேஜ்” அழகை மீண்டும் உயிர்ப்பிக்கும் விதமாக அமைந்துள்ளது. கதாபாத்திரம் குறித்து இயக்குநர் சொன்னவுடன் மோகன் பாபு பெரும் உற்சாகத்துடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அவர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் புதிய லுக், அவரது செல்லப்பெயரான “டைலாக் கிங்” க்கு ஏற்ப தத்ரூபமாக உள்ளது. இது பார்க்க அழுத்தமான, சக்திமிகுந்த மற்றும் ஸ்டைலான வேடமாக காணப்படுகிறது. சுதாகர் செருகுரி தயாரிப்பில், எஸ்எல்வி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகிறார்.

இதையும் படிங்க : ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த ஓ.ஜி.. பவன் கல்யாணின் படம் எப்படி இருக்கு?

8 மொழிகளில் படம் வௌியீடு

“தி பாரடைஸ்” படம் 2026 மார்ச் 26ஆம் தேதி, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம், ஆங்கிலம், மற்றும் ஸ்பானிஷ் என 8 மொழிகளில் வெளியாகிறது. படத்தில் கதாநாயகனாக நானி நடித்துள்ளார். இதில் மோகன் பாபு தவிர ராகவ் ஜூயாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க : சிவப்பு சேலை, நெற்றில் குங்குமம்… சோபிதா திடீர் விசிட்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!
Rajinikanth Murattu Kaalai Re-Release

ரஜினி ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம்.. மீண்டும் திரைக்கு வரும் ‘முரட்டுக்காளை’ திரைப்படம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர்

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com