International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறியவர்களை மாற்றுவோம் எனவும் தி.மு.க.வை விமர்சித்துள்ளார்.
International Womens Day 2025: சர்வதேச மகளிர் தினத்தில், பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய தவறியவர்களை மாற்றுவோம் எனவும் தி.மு.க.வை விமர்சித்துள்ளார்.
Published on: March 8, 2025 at 11:14 am
Updated on: March 8, 2025 at 11:16 am
சென்னை மார்ச் 8, 2025: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் ட்விட்டர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ” அனைவருக்கும் வணக்கம். இன்று சர்வதேச மகளிர் தினம். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் என்னுடைய அம்மா, தங்கை மற்றும் சகோதரி என அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அனைவரையும் பார்த்து சந்தோசம் தானே என கேட்டுள்ள விஜய், ” பாதுகாப்பு இருந்தால்தானே சந்தோஷமாக இருக்க முடியும்.. ! எந்த பாதுகாப்பும் இல்லாத நிலையில் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்?
நீங்க நாங்க எல்லோரும் சேர்ந்து தானே இந்த திமுக கவர்மெண்ட் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். அவங்க இப்படி நம்மளை ஏமாத்துவாங்கன்னு இப்பதானே தெரியுது” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய விஜய், ” எல்லாமே மாறக்கூடியது தானே! கவலைப்படாதீங்க..! ” என தெரிவித்துள்ளார்.
நீங்க எல்லாரும் சேர்ந்து.. நம்ம எல்லாரும் சேர்ந்து, மகளிர் காண பாதுகாப்பை உறுதி செய்ய தவறியவர்களை மாற்றுவோம்.
இன்று நாம் எல்லோரும் சேர்ந்து உறுதி ஏற்போம். ஒன்று மட்டும் சொல்லுகிறேன், எல்லா சூழலிலும் உங்களுடைய அண்ணனாக மகனாக தோழனாக உறுதுணையாக இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க தொகுதி மறு சீரமைப்புக்கு எதிர்ப்பு.. மார்ச் 12ல் திமுக கண்டன பொதுக்கூட்டம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com