ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வியை கொண்டுவர முடியுமா என ஹெச். ராஜா வினாயெழுப்பி உள்ளார்.
ஸ்டாலின் மகள் பள்ளியில் சமச்சீர் கல்வியை கொண்டுவர முடியுமா என ஹெச். ராஜா வினாயெழுப்பி உள்ளார்.
Published on: September 2, 2024 at 1:18 pm
H Raja PressMeet | சென்னை வேளச்சேரியில் உள்ள மு.க. ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டுவரப்படுமா? என தமிழக பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா கேள்வியெழுப்பினார்.
தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். இந்நிலையில், தமிழக பா.ஜ.க ஒருங்கிணைப்பாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அமைச்சர் பொன்முடி தமிழ்நாட்டில் இருமொழிக்கொள்கை போதும் என்கிறாரா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.
இதற்குப் பதிலளித்த ஹெச். ராஜா, “இதை சொல்வதற்கு பொன்முடிவுக்கு என்ன தகுதி உள்ளது? கல்லூரிகளில் பேராசிரியர் நியமனங்களில் ஊழல் நடைபெறுகிறது.
ஆனால், இதையெல்லாம் பார்க்காமல் பொன்முடி டான்ஸ் ஆடுகிறார். அவர் மீது கிராவல் மண் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சராக இருப்பதற்கே தகுதி இல்லாதவர் அவர்” என்றார்.
தொடர்ந்து, “எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை மாணவர்களும், பெற்றோரும் முடிவு செய்ய வேண்டும்” என்றார். இதையடுத்து கருணாநிதி கொண்டுவந்த சமச்சீர் கொள்கையை, மு.க. ஸ்டாலின் மகள் வேளச்சேரியில் நடத்தும் பள்ளியில் கொண்டு வருவார்களா? என்றும் கேள்வியெழுப்பினார்.
இதையும் படிங்க அமெரிக்காவில், ‘வாழை’ படம் பார்த்த மு.க ஸ்டாலின்: இயக்குனர் மாரிக்கு அன்பின் வாழ்த்து!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com