அமிர்தசரஸில் இயங்கிவந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் 7 பேர் காயமுற்றனர்.
அமிர்தசரஸில் இயங்கிவந்த சட்டவிரோத பட்டாசு ஆலை வெடித்துச் சிதறியதில் 7 பேர் காயமுற்றனர்.
Published on: September 2, 2024 at 2:12 pm
Updated on: September 2, 2024 at 2:18 pm
Punjab firecracker factory blast | பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவில் உள்ள ஜண்டியாலாவில் உள்ள நாகல் குரு கிராமத்தில் வாடகை வீட்டில் இயங்கி வரும் சட்ட விரோதமான பட்டாசு தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 7 பேர் வரை காயமடைந்தனர்.
வீட்டிற்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்ததில் இந்த தீ விபத்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அடுத்தடுத்த வெடிப்பில் ஏழு பேர் காயமடைந்தனர். இது மட்டுமின்றி கட்டடமும் வெடிப்பில் இடிந்தது.
காயமடைந்தவர்கள் உடனடியாக அமிர்தசரஸில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டுவெடிப்பு நிகழ்ந்த வீட்டின் உரிமையாளர், தனது சொத்தில் சட்டவிரோத பட்டாசு ஆலை இயங்கி வருவதை அறியவில்லை” எனக் கூறியிருந்தார்.
போலீசாரின் கூற்றுப்படி, நில உரிமையாளர் தமக்கு இந்த பட்டாசு ஆலை குறித்து தெரியாது என்றும் விபத்து நடந்த பின்னரே அறிந்துக் கொண்டதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: தெலங்கானாவில் கனமழை; ஒருவர் மரணம், 3 பேர் மாயம்: 99 ரயில்கள் ரத்து
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com