O Panneerselvam: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
O Panneerselvam: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Published on: April 11, 2025 at 11:39 pm
சென்னை ஏப்ரல் 11 2025: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்கலாம் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
அதிமுக பாஜக கூட்டணி
தமிழ்நாட்டில், அதிமுக பாஜக இடையே மீண்டும் தேர்தல் கூட்டணி ஏற்பட்டுள்ளது. முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி சில நிபந்தனைகளை விதித்துள்ளார் என கூறப்படுகிறது. அந்த நிபந்தனையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு மீண்டும் இடம் அளிக்கக்கூடாது என வலியுறுத்தியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக சென்னையில் இன்று ( ஏப்ரல் 11 2025) செய்தியாளர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, “அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில், பாஜக தலையிடாது” என்றார். மேலும் இந்த கூட்டணி உருவாக எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை எனவும் அமித் ஷா செய்தியாளர் சந்திப்பின்போது தெளிவு படுத்தினார்.
ஓபிஎஸ் தனிக்கட்சி
இதற்கிடையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு இன்று நடந்துள்ளது. இந்தப் பதவிக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மட்டும் நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வேட்பு மனுவை தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய தலைவர் அண்ணாமலை, முன்மொழிந்தார். நைனார் நாகேந்திரன் மட்டும் நாமினேஷன் தாக்கல் செய்துள்ளதால், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நைனார் நாகேந்திரன் நாளை தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஓ பன்னீர் செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமி எதிர்ப்பு தெரிவிப்பதால் அவர் புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஒருவர் எம்ஜிஆர் அதிமுக என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்குகிறார் என்றும் அந்த தகவல் நீள்கிறது. இந்த நிலையில், எதிர்கால அரசியலைக் கருத்தில் கொண்டு ஓ பன்னீர்செல்வம் புதிய கட்சியை தொடங்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கண்டனத்தை பதிவு செய்து விட்டேன்.. கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.. கனிமொழி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com