Selvaraj Leaves DMK : விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ திமுகவிலிருந்து விலகினார்.
Selvaraj Leaves DMK : விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி, திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ திமுகவிலிருந்து விலகினார்.

Published on: May 21, 2026 at 10:01 pm
திருப்பூர், மே 21, 2026: முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மூத்த திமுக தலைவருமான கே. செல்வராஜ், நீண்டகால கட்சி தொண்டர்கள் ஓரங்கட்டப்படுவதாகக் குற்றம் சாட்டி, வியாழக்கிழமை (மே 21, 2026) கட்சியிலிருந்து விலகினார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எதிர்க்கட்சிகளில் இருந்து இணைந்த தலைவர்களுக்கு தேவையற்ற முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறினார்.
ராஜினாமா அறிவிப்பு
தொடர்ந்துப் பேசிய செல்வராஜ், “கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருக்க விரும்பியதால், மற்ற கட்சிகளின் அழைப்புகளை நிராகரித்தேன். ஆனால் இப்போது, கனத்த இதயத்துடன், திமுகவில் எனது அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் விலகுகிறேன்” என்றார்.
என்ன காரணம்?
மேலும், கட்சியில் இருந்து விலகல் குறித்தும் அதிருப்தி குறித்தும் விளக்கிய செல்வராஜ், “திருப்பூர் தெற்கு தொகுதியில் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு கேட்டேன்; ஆனால், எனக்கு சீட் கொடுக்க கூடாது, மறுக்குமாறு, திருப்பூரைச் சேர்ந்த ஒரு முக்கிய தொழிலதிபர் கட்சித் தலைமையில் செல்வாக்கு செலுத்தினார்.
இதனால் எவ்வித ஆலோசனையின்றி பல்லடம் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். அங்கு போட்டியிட்டு தோற்றேன்” என்றார். மேலும், “என்னைப் போன்ற மூத்த தலைவருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண தொண்டர்களின் அவல நிலையை ஒருவர் கற்பனை செய்து பார்க்கலாம்,” என்றும் அவர் தெரிவித்தார்.
வேறு அரசியல் கட்சி….
இந்த நிலையில் வேறு ஏதேனும் அரசியல் கட்சியில் இணைவீர்களா? என்ற கேள்விக்கு, வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேரும் எண்ணம் தனக்கு இல்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
தி.மு.க. மூத்த நிர்வாகி
1976 முதல் திமுகவுடன் தொடர்புடைய செல்வராஜ், திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளராகவும், நகராட்சித் தலைவர் மற்றும் மேயராகவும் பணியாற்றியவர் ஆவார். இவர், 2021-ல் திருப்பூர் தெற்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : விஜய், கூட்டணிக் கட்சிகளிடம் கவனம்.. குறிப்பாக, காங்கிரஸ்.. தமிழிசை சௌந்தரராஜன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com