சென்னை, ஆக.19 2025: தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு மனைவி இயற்கை எய்தியுள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திரு டி.ஆர். பாலு அவர்களின் மனைவியும், தமிழக தொழில்துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்களின் அன்னையுமான திருமதி. ரேணுகா தேவி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
திருமதி ரேணுகாதேவி அவர்களை இழந்துவாடும் திரு.டி.ஆர் பாலு அவர்களுக்கும், திரு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Temple Mobile Phone Rules: தமிழகத்தின் 52 முக்கிய கோயில்களில் செல்போன் கட்டுப்பாடு தளர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், புகைப்படம், செல்ஃபி எடுக்கத் தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது….
Erode Turmeric Price Rise: ஈரோட்டில் மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.20,799 ஆக உயர்ந்துள்ளது; இது உற்பத்தி சரிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது….
Transgender Education Scholarship: உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி சார்பில், 2026–27 கல்வியாண்டுக்கான திருநங்கையர் கல்வி உதவித்தொகைத் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
Veeramani Arrested: சிறுமி தற்கொலை வழக்கில் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டார்….
Annamalai Local Body Polls: தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தலைவர்களை உருவாக்குவோம்; உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம் என அண்ணாமலை அறிவித்துள்ளார்….
Sneha Birthday Wishes: நடிகை சினேகாவின் பிறந்தநாளையொட்டி, அவரது கணவரும் நடிகருமான பிரசன்னா சமூக வலைதளத்தில் அன்பான வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்….