பெங்களூரு, ஆக.19 2025: கர்நாடகா மாநிலத்தின் தாவங்கேரில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன்பு தெருநாய் கடித்த 4 வயதான சிறுமி, செவ்வாய்க்கிழமை (ஆக.19 2025) பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். இவருக்கு கடுமையான ரேபிஸ் நோய் பாதிப்புகள் இருந்துள்ளன.
முன்னதாக, கதீரா பானு பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பு, ஏப்ரல் மாதம் அந்தச் சிறுமி வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருந்தபோது, தெருநாய் ஒன்று அவளைக் கடித்து குதறிவிட்டது.
அந்த நாய் அவளது முகத்தையும் உடலின் பிற பாகங்களையும் கடித்து இருந்தது. இதில் சிறமி படுகாயம் அடைந்தார். உடனடியாக அவளை அவளது குடும்பத்தினர் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் உயர் சிகிச்சைக்காக பெங்களூரு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, நாய் கடித்தால் ரேபிஸ் இறப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, டெல்லி-என்சிஆர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் உள்ள அனைத்து தெருநாய்களையும் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து தங்குமிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.14, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Director Sundar C: நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகினார்….
Bison OTT release: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகிறது….
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.13, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன….
Who is Shaheen Shaheed: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள்…