CM Vijay Joins Anti-Drug Run : தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்களுடன் ஓடி, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசின் உறுதியை வலியுறுத்தினார்.
CM Vijay Joins Anti-Drug Run : தமிழக முதலமைச்சர் விஜய் சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டு இளைஞர்களுடன் ஓடி, போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் அரசின் உறுதியை வலியுறுத்தினார்.

Published on: June 26, 2026 at 2:17 pm
சென்னை, ஜுன் 26 2026: சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் “ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்” என்ற பெயரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார், பின்னர் அனைவரும் முதலமைச்சர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றார்.
இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட முதலமைச்சர் விஜய், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குற்றங்களைத் தடுக்கவும், போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்கவும், போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும்.
— CMOTamilNadu (@CMOTamilnadu) June 26, 2026
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை… pic.twitter.com/AONKH6bnLK
கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலமாகவும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் கூட்டு முயற்சி மூலமாகவும் போதைப்பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தைப் படைக்க முடியும்.
போதைப்பொருட்கள் தொடர்பான குற்றங்களைத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அனைவரும் துணை நின்று, போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான தமிழ்நாட்டை உருவாக்கிட இந்நாளில் உறுதியேற்போம். என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ரூ.2,47,130 கோடி கடன்.. வெள்ளை அறிக்கையில் தகவல்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com