FIR Filed Against Udhayanidhi : தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், திமுக தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல்துறை 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
FIR Filed Against Udhayanidhi : தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரில், திமுக தலைவர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின் மீது தஞ்சாவூர் காவல்துறை 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

Published on: August 4, 2026 at 12:07 pm
Updated on: August 4, 2026 at 12:33 pm
சென்னை, ஆக. 4 2026: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு எதிராகப் பொதுமேடையில் அவதூறான கருத்துகளைத் தெரிவித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது காவல்துறை 6 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு (FIR Registered) செய்துள்ளது.
தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு தி.மு.க. சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் மற்றும் தி.மு.க. இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி பேசினார். அப்போது, முதலமைச்சர் விஜய்க்கு எதிராக அவர் இரட்டை அர்த்தத்தில் பேசினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு தவெக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, உதயநிதிக்கு எதிராக தஞ்சை காவல் நிலையத்தில் த.வெ.க. மகளிரணி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, உதயநிதிக்கு எதிராக 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல், இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டுதல் மற்றும் மக்கள் பிரதிநிதிக்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் கீழ் தஞ்சாவூர் காவல் நிலையத்தில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலினியிடம் நேரடியாக விசாரணை நடத்தவும், சட்டரீதியான நோட்டீஸ் வழங்கவும் தஞ்சாவூரிலிருந்து சிறப்புத் தனிப்படை போலீசார் அவசரமாகச் சென்னைக்கு வருகை தந்துள்ளனர். சென்னை பெருநகர காவல் ஆணையரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ள தஞ்சை காவல்துறையினர், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தஞ்சை தனிப்படை போலீசார் சென்னை வந்துள்ள செய்தி பரவியதைத் தொடர்ந்து, ஆழ்வார்பேட்டையில் உள்ள உதயநிதி ஸ்டாலினின் இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகப் பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, கூடுதல் போலிசார் குவிக்கப்பட்டு அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அரசியல் விமர்சனங்களைப் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பாயப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ள திமுக வழக்கறிஞர்கள் அணி, இந்த 6 பிரிவுகள் கொண்ட வழக்கை எதிர்கொள்ள சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யத் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: தமிழக அமைச்சரவை மாற்றம்? எப்போது தெரியுமா? பரபரப்பு தகவல்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com