Radhapuram | ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Radhapuram | ராதாபுரத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Published on: September 10, 2024 at 7:35 pm
Radhapuram | நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் தோட்டத்துக்கு வேலை பார்க்க வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தொடுத்ததாக பா.ஜ.க. பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா கும்மிளம்பாடு கிராமத்தை சேர்ந்த செல்வக்குமார் (37) என்ற இளைஞர் மாவட்ட ஊடக பிரிவில் நிர்வாகியாக உள்ளார்.
இவர் தோட்டத்துக்கு வேலைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இவர் மீது புகார் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் செல்வக்குமார் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்ணும் பா.ஜ.க நிர்வாகி பாலியல் தொல்லை அளித்த விவகாரம் அப்பகுதியில் பெரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சென்னையில் 6ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு: புகாரளிக்க சென்ற தாயின் கையை முறுக்கிய இன்ஸ்பெக்டர்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com