சென்னையில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்க சென்ற சிறுமியின் தாயார் மிரட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
சென்னையில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட விவகாரத்தில் புகார் அளிக்க சென்ற சிறுமியின் தாயார் மிரட்டப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
Published on: September 8, 2024 at 10:19 am
Updated on: September 8, 2024 at 10:20 am
சென்னையை சேர்ந்த 6ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அந்தச் சிறுமி உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் வீட்டில் இருந்ததை பார்த்த தாயார் மருத்துவமனை அழைத்துச் சென்றதில் இந்த கொடூரம் வெளியே வந்தது.
இந்த நிலையில் மருத்துவர்கள் சிறுமியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளனர். அதன்பேரில் சிறுமி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை தண்ணீர் கேன் போட வந்த சதீஷ் என்ற இளைஞர் பாதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புகார் அளிக்க சென்ற சிறுமியின் பெற்றோரை இன்ஸ்பெக்டர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார், “இன்ஸ்பெக்டர் என் கையை முறுக்கி, குழந்தையை சரியாக வளர்க்காத தாய் என புகார் பதிந்து 3 ஆண்டுகள் உள்ளே தள்ளிவிடுவேன்” எனக் கூறியதாக கூறியுள்ளார். தற்போது, இந்த விவகாரத்தில் போக்சோ வழக்கில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும், விசாரணைக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : திருநெல்வேலி: பழ வியாபாரி போக்சோவில் கைது
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com