kenya school fire | பள்ளி விடுதி தீ விபத்தில் 21 குழந்தைகள் உயிரிழந்தனர்.
kenya school fire | பள்ளி விடுதி தீ விபத்தில் 21 குழந்தைகள் உயிரிழந்தனர்.
Published on: September 8, 2024 at 9:45 am
kenya school fire | கென்யா நாட்டில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து மீட்புப் பணிகள் அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மத்திய கென்யாவில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 21 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும், 12க்கும் மேற்பட்ட குழந்தைகளை இன்னமும் காணவில்லை. அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்” என்றார்.
இந்த தீ விபத்து என்டார்சா தொடக்கப் பள்ளியில் நிகழ்ந்துள்ளது. பள்ளியில் 10-14 வயதுக்குள்பட்ட 156 மாணவர்கள் படித்துள்ளனர். இதற்கிடையில் தீயில் கருகிய மாணவர்களை அடையாளம் காண்பதிலும் சிக்கல் நீடிப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அடுத்தடுத்து விழுந்த இரண்டு ஏவுகணை; உக்ரைனில் 41 பேர் பலி: 180 பேர் படுகாயம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com